ஓனர் ஆகிய நூற்று கணக்கான சிங்கப்பூர்காரர்கள்!
சிங்கப்பூரில் வாடகை வீட்டில் இருந்த நூற்று கணக்கானோர் உரிமையாளர்களாகியுள்ளனர்.
700 பேர் கடந்த ஆண்டு வீட்டு உரிமையாளர்களாகிவிட்டதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த பத்தாண்டுகளில், வாடகை வீட்டிலிருந்த 7,800க்கும் மேற்பட்டோர் சொந்த வீடுகளை வாங்கியிருக்கின்றனர். கழகம் வழங்கியுள்ள மானிய ஆதரவின் மூலம் அது சாத்தியமானதென குறிப்பிடப்படுகின்றது.
வாடகை வீட்டில் வசிக்கும் இன்னும் 2,300 பேர், சொந்த வீடுகளை வாங்குவதற்கு ஆதரவு வழங்கப்படுவதாகக் கழகம் குறிப்பிட்டது. அவர்கள் புது வீடுகளைத் தெரிவு செய்துவிட்டதாகவும், அதன் கட்டுமானப் பணிகள் முடிப்பதற்குக் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அதன் புதுத்தொடக்க வீட்டுத் திட்டத்தை மேம்படுத்தவிருக்கிறது.
மேலும் வீட்டு விலைகள் கட்டுப்படியாக இருப்பதற்கும், பலதரப்பட்ட வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அது மேம்படுத்தப்படுகிறது.