கனடாவில் மனைவிக்கு தடுப்பூசி செலுத்திய தாதியை தாக்கிய கணவன்! பொலிஸார் வலைவீச்சு
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் தனக்கு தெரியாமல் தன் மனைவிக்கு தடுப்பூசி செலுத்திய தாதியை தாக்கிய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
தென்கிழக்கு மொன்ட்ரீலில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் குறித்த பெண் தாதி ஈடுபட்டு வருவதாக க்யூபெக் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்தகத்தில் தனது மனைவி தடுப்பூசி செலுத்திக்கொண்டமையால் அதிர்ச்சி அடைந்த நிலையில் கணவர் இவ்வாறு தாக்கியுள்ளார்.
கொரோனா தொற்று காலப்பகுதியில் தாதியர்கள் பலர் சர்வதேச ரீதியில் பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கனடாவில் தேர்தல் நடைபெற்ற முடிந்துள்ள நிலையில் அங்கு தடுப்பூசிக்கு எதிரான செயற்பாடுகளும் கருத்துக்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் தடுப்பூசிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதை தடுக்கும் விசேட சட்டத்தை நிறைவேற்ற தனது அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக க்யூபெக் முதல்வர் ப்ரென்கொய்ஸ் லெகால்ட் குறிப்பிட்டுள்ளார்.
அல்லது இதற்கான அபாரதம் விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.