பிரான்ஸில் 10 வருடங்களாக மனைவி போதைமருந்து கொடுத்து கணவன் அரங்கேற்றிய கொடூரம்
பிரான்ஸில் மனைவிக்கு தினமும் உணவில் போதைமருந்து கலந்து அவருக்கே தெரியாமல் 10 வருடங்களாக விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லி டொமினிக் என்பவர் தினமும் இரவில் மனைவி பிரான்சுவாவுக்கு போதை மருந்து கொடுத்து பல ஆண்களுக்கு விருந்தாக்கி உள்ளார். மனைவிக்கு சந்தேகம் வராமல் டொமினிக் 10 ஆண்டுகளாக இந்தக் கொடுமையைத் செய்து உள்ளார்.
மனைவிக்கு உணவில் போதை மருந்து கொடுத்து விபச்சாரம்
இதில் 91 முறை அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதாகவும் இவை அனைத்தையும் கணவர் வீடியோ எடுத்து வைத்து உள்ளார்.
தெற்கு பிரான்சில் உள்ள அவிக்னான் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்த குற்ற செயலில் 83 பேரை ஈடுபடுத்தி உள்ளார்.
இவர்கள் 26 முதல் 73 வயதுக்கு உட்பட்டவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. 83 பேரில் 51 பேரை கைது செய்து உள்ள போலீசார் அவர்கள் மீது 92 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர்.
மற்றவர்களை அடையாளம் காணமுடியவில்லை. குற்றவாளிகளில் தீயணைப்பு வீரர், லாரி டிரைவர், நகராட்சி கவுன்சிலர், வங்கி ஊழியர், ஐடி ஊழியர், சிறைக்காவலர், செவிலியர் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளனர்.
92 பேர் மீது வழக்கு
வீடியோ வெளியீட்டு விபசாரத்திற்கு வாடிக்கையாளர்களை அழைத்து வந்த கணவர் வீட்டிற்கு வரும் ஆண்களுக்கு , பல்வேறு கட்டுப்பாடுகளை வித்த்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வாகனங்களை அருகில் உள்ள பள்ளி அருகே விட்டுவிட்டு இருட்டில் நடந்து சந்தேகப்படாமல் வீட்டுக்கு வரச் சொல்லி உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர், இது குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளிடம்,இப்படி நடப்பது தங்களுக்குத் தெரியாது என்றும், சிலர் அவருடைய மனைவி தான் என்று தெரியாது என கூறி உள்ளனர்.