டிரம்பின் மருமகளுடன் உறவில் உள்ளேன் ; பிரபலத்தின் பதிவால் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முன்னாள் மருமகள் வனேசா டிரம்புடன் (Vanessa Trump) உறவில் உள்ளதாக பிரபல கோல்ஃப் வீரர் டைகர் வூட்ஸ் ( Tiger Woods ) தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை டைகர் வூட்ஸ் ( Tiger Woods ) சமூக ஊடகபதிவில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் "காதல் காற்றில் தவழ்கின்றது,நீங்கள் என் பக்கத்தில் இருந்தால் வாழ்க்கை சிறப்பாகயிருக்கும்,நாங்கள் இணைந்து பயணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என டைகர் வூட்ஸ் ( Tiger Woods )தெரிவித்துள்ளார்.
இரகசியமாக வைத்திருந்த வூட்ஸ்
வனேசா டொனால்ட் டிரம்ப் (Vanessa Trump) ஜூனியரை திருமணம் செய்து 2005 முதல் 2018 வரை அவருடன் வாழ்ந்தார், அவர்களிற்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.
வனேசாவின் (Vanessa Trump) 17 வயது ஹை 2026 ம் ஆண்டு முதல் மியாமி பல்கலைகழகத்தில் கோல்ப் விளையாடவுள்ளார், டைகர் வூட்ஸின் ( Tiger Woods) பிள்ளைகளும் அங்கேயே கல்விகற்கின்றனர்.
டைகர் வூட்ஸினதும் ( Tiger Woods ) வனேசா டிரம்பினதும் (Vanessa Trump) பிள்ளைகள் இந்த வாரம் இடம்பெற்ற கோல்வ் போட்டியில் பங்குபெற்றியிருந்தனர். வூட்ஸ் ( Tiger Woods வனேசா உறவு குறித்து கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தது.
அதேவேளை தனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் இரகசியமாக வைத்திருந்த வூட்ஸ் ஏன் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தினார் என்பத தெரியவில்லை.
அதேசமயம் வூட்ஸ் ( Tiger Woods) , டிரம்புடன் பல தடவை கோல்வ் விளையாடியிருந்தார். டிரம்ப், வூட்சிற்கு ( Tiger Woods ) 2018 இல் ஜனாதிபதி விருதினை வழங்கி கௌரவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.