டெய்லர் ஸ்விஃப்டை வெறுக்கிறேன்; ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிசை ஆதரிப்பதாக தெரிவித்த பிரபல அமெரிக்க பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்டை தான் வெறுப்பதாக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
‘அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு தான் எனது வாக்கு’ என டெய்லர் ஸ்விஃப்ட் கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் தளத்தில் தெரிவித்திருந்தார். அவரது அந்த பதிவு அதிக லைக்குகளை பெற்றது.
இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்-டாக் சமூக வலைதளத்தில் சுமார் 400 மில்லியன் ஃபாலோயர்கள் டெய்லர் ஸ்விஃப்டை பின்தொடர்கின்றனர்.
இவ்வாறான சூழலில்தான் அவரை விமர்சித்துள்ளார் ட்ரம்ப். “நான் டெய்லர் ஸ்விஃப்டை வெறுக்கிறேன்” என ட்ரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருவதுடன் இதுவொரு மோசமான பிரச்சார உத்தி என்றும் சொல்லியுள்ளனர்.
அதே நேரத்தில் வலதுசாரியான லாரா லூமருடன், ட்ரம்ப் இணைந்திருப்பதை அவரது சொந்தக் கட்சியினரே விமர்சித்துள்ளனர்.