காசாவில் ஒரு பாண் துண்டிற்காக ஏங்கினேன்; எகிப்திற்கு வந்த பெண் கண்ணீர்
இஸ்ரேல் - ஹமாஸ் போரால் காசாவில் சிக்குண்டிருந்த நிலையில் எகிப்திற்கு வந்துசேர்ந்துள்ள அவுஸ்திரேலியர்கள் காசாவில் தாங்கள் எதிர்கொண்ட பயங்கரமான அனுபவங்கள் குறித்த தகவல்கள் வெளியிட்டுள்ளன.
காசா தொடர்ச்சியான குண்டுவீச்சினை முற்றுகையை எதிர்கொண்டுள்ள நிலையில் எகிப்துடனான ரபா எல்லை ஊடாக உலக நாடுகளை சேர்ந்தவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காசாவில் உணவை பெறுவது மிகவும் கடினமானது ஆபத்தானது
அதன்படி அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார திணைக்களத்தில் பதிவு செய்த 23 அவுஸ்திரேலிய பிரஜைகள் அங்கிருந்து வெளியேறலாம் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வொங் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இதற்கான முயற்சிகளில் நீண்டகாலமாக ஈடுபட்டிருந்தோம் எனது எகிப்திய சகாவுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன் நான் நிம்மதியாக உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ரபா எல்லை ஊடாக வெளியேறியவர்களில் ஒருவரான அவுஸ்திரேலிய பெண் மொனா தனது குடும்பத்தை உணவும் நீரும் இல்லாத காசாவில் விட்டுவிட்டு வந்துள்ளமை குறித்து கடும் வேதனை வெளியிட்டுள்ளார்.
ஒரு பாண் துண்டிற்காக ஏங்கினேன்
காசாவில் உணவை பெறுவது மிகவும் கடினமானது ஆபத்தானது உங்களால் அதனை கற்பனை செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் , நான் உண்ணவிரும்பாத ஒரு துண்டு பாணை பெற்றுக்கொள்வதற்காக நான் மிகவும் கஸ்டப்பட்டேன். சிறுவர்களிற்காகவே அதனை நான் பெற்றுக்கொண்டேன் எங்கள் குடும்பத்தில் 17 சிறுவர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு உணவு இல்லை என கலங்கிய அப்பெண், கடந்த இரண்டு நாட்களாக நீரும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். நான் எனது குடும்பத்தை பார்க்கப்போகின்றேன் என சந்தோசமடைகின்றேன் எனினும் அதேவேளை நான் எனது சகோதரர்களை முழு குடும்பங்களையும் அங்கு விட்டுவிட்டு வருகின்றேன்.
இதனால் நான் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை அவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் நிலைமை மிக மிகமோசமாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தாங்கள் எகிப்திற்குள் தப்பிவந்ததும் அவுஸ்திரேலியா அரசாங்கம் தங்களை சிறந்த விதத்தில் பராமரித்துள்ளது எனவும் மெல்பேர்னை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.