முன்மொழிவுகளில் எனக்கு திருப்தியில்லை ; முரண்டு பிடிக்கும் ட்ரம்ப்
ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் குறித்து பேசிய ட்ரம்ப், "அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறார்கள், ஆனால் தற்போதைய முன்மொழிவுகளில் எனக்கு திருப்தியில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
மேலும், "தலைவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போவதில்லை, அங்கே யார் தலைவர் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை.

மனித நேய அடிப்படையில், அவர்களை அழிப்பதைப் காட்டிலும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வதையே நான் விரும்புகிறேன்.
இருப்பினும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ராணுவ நடவடிக்கை ஒரு வாய்ப்பாகத் தொடரும்.
ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை, அது அரசியலமைப்புக்கு எதிரானது" என்றும் தெரிவித்தார்.