நடிக்க மாட்டேன்... முரண்டு பிடிக்கும் பிரபல நடிகை: புலம்பும் தயாரிப்பாளர்கள்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால்.
இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயத்தில் திடீரென காதலரை திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
இருப்பினும் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பேன் என நடிகை காஜல் அகர்வால் கூறிய பிறகுதான் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைத்தனர். அதேபோல் அந்த நடிகையும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் நடிகை திடீரென படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
மேலும் புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடமும் ஏதாவது ஒரு மொக்கை காரணம் கூறி கதையை நிராகரித்து வருகிறாராம்.
என்ன காரணமாக இருக்கும் என அனைவரும் குழம்பி இருக்கும் சமயத்தில் தான் நடிகை கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியானது. இது நடிகைக்கு மகிழ்ச்சியான செய்தி தான். ஆனால் தயாரிப்பாளர்களுக்கு அல்ல.
ஆம் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் செய்தி அவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களுக்கு சற்று வருத்தத்தை தந்துள்ளதாம். ஏனெனில் அவர் கைவசம் வைத்துள்ள அரை டஜன் படங்களும் பாதியில் நிற்கின்றன.
இதனால் படப்பிடிப்பை தொடர முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம். சில தயாரிப்பாளர்கள் அந்த நடிகை காஜல் அகர்வாலை நீக்கி விட்டு வேறு நடிகைகளை நடிக்க வைக்கலாம் என முயற்சித்து வருகிறார்களாம்.
திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என கூறிவிட்டு இப்படி பின்வாங்குவது நியாயமா என தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்கள்.