கனடாவில் நவம்பர் மாதம் 4ம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு
கனடாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடாவின் நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் சாம்பெயின் இது குறித்து அறிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 4ம் திகதி வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசின் முதல் வரவு செலவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த வரவு செலவுத் திட்டம் அரசியல் வட்டாரத்தில் சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள வர்த்தக பதற்றத்தால் கனடா பொருளாதாரம் பாதிக்கப்படாமல் காப்பதற்கும், செலவுகளை குறைப்பதோடு புதிய முதலீடுகளையும் அறிவிப்பதற்கும் இந்த வரவு செலவுத் திட்டம் உதவும் என பிதமர் கார்னி வலியுறுத்தியுள்ளார்.