அமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்துவோம்; ஈரான் அறிவிப்பு
அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்தினால் ஈரானும் தமது தாக்குதல்களை நிறுத்தும் என ஈரானிய சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர்கள் தங்களின் தாக்குதல் இலக்குகள் குறைந்து வருவதாகவும், அமெரிக்க ஆயுதக் களஞ்சியம் காலியாகி வருவது குறித்தும் கவலை தெரிவித்ததை அடுத்து, அமெரிக்கா தமது தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் மீது 13 இரவுகள் தீவிரமாக அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், வார இறுதி நாட்களில் எவ்வித தாக்குதல்களும் பதிவாகவில்லை.
அத்துடன் அமெரிக்கத் தளங்கள் அமைந்துள்ள அண்டை நாடுகள் மீதும் ஈரானும், கடந்த இரண்டு நாட்களாகத் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை.
தெஹ்ரானின் நிலைப்பாடு தாக்குதலுக்குத் தாக்குதல் என்பதாகவே தொடர்வதாகவும், தாக்குதல்கள் நின்றால், ஈரானும் தனது நடவடிக்கைகளை நிறுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.