சர்வதேச விமான ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி! உலகில் முதன்முறை
துபாயில் கின்னஸ் உலக சாதனைகள் பல வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக விமான ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியிலும் இத்தகைய புதுமை படைக்கப்பட்டுள்ளது.
உலகில் முதன் முறையாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கப்படும் ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி நடாத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்களுக்கு பேரீச்சம் பழம், தண்ணீர், ஜூஸ், பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த பொருட்களை கொண்டு நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர்.
இதேவேளை, விமானங்கள் தரையிறங்குவது, செல்வதும் வழக்கம் போல் நடந்து வந்தன. இதனை பார்த்தவாறே நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டனர்.