இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் இலங்கையில் மரணம்!
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவால் சற்று முன்னர் காலமானார்.
உடல் நலக் குறைவு காரணமாக இலங்கையில் உள்ள வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.
உயிரிழக்கும் போது அவருக்கு 47 வயதாகும்.
5 மாதங்களாக உடல்நல குறைவால் அவதியுற்றதாகவும், இதன் காரணமாக அவர் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் உயிரிழந்துள்ள நிலையில் .நாளை மாலை அவரது உடல் சென்னைகக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இசைஞானி இளையராஜாவின் விசேட இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விபரங்கள் எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை.