வாழ்விடங்களை விட்டு வெளியேறும் Ile-de-France மக்கள்!
பிரான்சின் தலைநகரையும், அதை அண்டிய நகரங்களை உள்ளடக்கிய Ile-de-France பகுதியில் வாழும் கணிசமான பிரான்ஸ் நாட்டவர்கள் தற்காலிகமாக தங்களின் வதிவிடம்களை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் போது சுமார் 15 மில்லியன் வெளிநாட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் பாதுகாப்பு கருதி பிரான்ஸில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதில் சில பகுதிகளுக்கு செல்ல'பாஸ்' நடைமுறை, பல தொடரூந்து நிலையங்கள் மூடப்படல், அதிகமான காவல்துறையினரின் நடமாடல், என பல அசோகரியங்கள் மக்களுக்கு ஏற்படவுள்ளது.
ஒலிம்பிக் போட்டி காலத்தில் அதிகமான வாகன நெரிசல்கள், பொதுப் போக்குவரத்து நெரிசல்கள் உணவகங்களில் அதிக கூட்டங்கள், களியாட்டங்கள், அதிக வெளிநாட்டவர்களின் வருகைகள், என்பன அதிகமாக காணப்படும்.
இதனால் வழிப்பறிப்புகள், களவுகள் அதிகரிக்கும் எனவும் பயம் கொள்ளும் பிரான்ஸ் நாட்டவர்களே இவ்வாறு வெளியேற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனவே ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர், அவர்கள் அமைதியான பகுதிகளுக்கு செல்ல அவர்கள் தயாராகி வருகின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.