பிரித்தானியாவில் ஆசிய நாட்டவர் 11 பேர் அதிரடியாக கைது
பிரித்தானியாவில் சட்டவிரோத தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவின் சர்ரே கெம்ப்டன் பார்க் கிறிஸ்மஸ் சந்தையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா, ஈராக் மற்றும் சீனா
இதன்போது, இந்தியா, ஈராக் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் நாடு கடத்தப்படுவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் குடியேற்றப் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அந்தநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில், சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவதற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய, கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில், முன்னெடுக்கப்பட்ட 11 ஆயிரம் சோதனை நடவடிக்கைகளில் எண்ணாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.