பாகிஸ்தானுக்கு கடன் வழங்க IMF அனுமதி
பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அனுமதியளித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது. எஞ்சிய தொகை எதிர்வரும் 3 வருடங்களுக்கு வெவ்வேறு கட்டங்களில் வழங்கப்படும்.
இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பயணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1958ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 20க்கும் மேற்பட்ட கடன்களை பெற்றுள்ளது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திடம் அதிக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் 5வது இடத்திலும் உள்ளது.
அதேநேரம் புதிய திட்டத்துக்கு அமைய பாகிஸ்தானில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, வரி திருத்தம் உள்ளிட்ட பல முன்மொழிவுகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளது.