கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கும் வெளிநாட்டு தொழில் முனைவோர்
கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதில் வெளிநாட்டு தொழில்முனைவோர் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்டார்ட்-அப் விசா திட்டம் புத்தாக்க தொழில்முனைவோரை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். எனினும் விண்ணப்பதாரர்கள் பணி அனுமதி மற்றும் நிரந்தர குடியுரிமை பெறுவதில் நீண்ட தாமதங்களை எதிர்கொள்வதாக புலம்பெயர்ந்தோர் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பணி அனுமதி பெற்றவர்கள், நிரந்தர குடியிருப்பாளர்களை விட தங்கள் வணிகத்தை தொடங்குவதற்கும் நிதியுதவி பெறுவதற்கும் பல தடைகளை எதிர்கொள்கின்றனர் என டொராண்டோவைச் சேர்ந்த க்ரீன் அண்ட் ஸ்பீகல் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஸ்டீபன் க்ரீன் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தற்போது வணிக தொழில்முனைவோருக்கு கனடாவுக்கு வருவதற்கு ஒரே வழியாக உள்ளது. ஆனால், வங்கிகள் பணி அனுமதியில் உள்ளவர்களுக்கு நிதியுதவி வழங்குவதில் தயக்கம் காட்டுவதாக க்ரீன் கூறியுள்ளார்.
2013 இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 900-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, 3,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் நிரந்தர குடியுரிமை அனுமதிகளை பெற்றுள்ளனர்.
ஆனால், 42,200 விண்ணப்பங்களில் 16,370 விண்ணப்பங்கள் 24 மாதங்களுக்கு மேலாக இறுதியாகப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.