சுவிஸில் லுசேர்ன் மாகாணத்தில் இருப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!
சுவிற்சர்லாந்தில் லுசேர்ன் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தரிப்பிடங்களில் பூட்டப்பட்டு பார்க்கிங் செய்திருக்கும் கார்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
லுசேர்ன் மாகாணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகம் பதிவாகுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் லுசேர்ன் மற்றும் அதனை அண்டிய எம்மன் பகுதியில் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறான திருட்டு சம்பவங்களில் இருந்து மக்கள் எச்சரிக்கையான இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸாரின் அறிவிப்பின்படி., பின்வரும் நடமுறைகளை நீங்கள் பின்பற்றினால் திருட்டு சம்பவங்களில் இருந்து உங்கள் உடமைகளை பாதுகாத்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அவை:
காரில் விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் வைக்க வேண்டாம். காரில் இருக்கும் சிறிய மறைவான பகுதியை கூட திருடர்கள் விட்டுவைப்பதில்லை.
எப்பொழுதும் காரை பூட்டி வைக்கவும் சிறிது நேரம் இல்லாத போதும். கார் வீட்டின் பின்புறம் அல்லது கேரேஜில் இருப்பது போன்ற பாதுகாப்பான இடத்தில் இருந்தாலும் கூட. நீங்கள் தொலைவில் இருக்கும்போது பக்கவாட்டு அல்லது கூரை ஜன்னல்கள் எப்பொழுதும் முழுமையாக மூடப்பட வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் தென்பட்டால் உடனடியாக அவசர எண்ணான 117 க்கு தெரிவிக்கவும்.
உதாரணமாக, யாராவது பதுங்கியிருந்தால் அல்லது நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை சேதப்படுத்தினால் உடனடியாக பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.