சிறந்த கிறிஸ்துமஸ் பரிசளியுங்கள்; இங்கிலாந்து பிரதமர் விடுத்த முக்கிய கோரிக்கை!
கிறிஸ்தவ மத மக்களின் பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்படு உள்ளது.
பண்டிகையை கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வரும்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் ,
பரிசுப்பொருட்களை வாங்க இன்னும் சில மணி நேரங்கள் உள்ளபோதும், நீங்கள் இன்னும் உங்கள் குடும்பத்தினருக்கும், நாட்டிற்கும் சிறந்த பரிசுகளை அளிக்கலாம். அது என்னவென்றால் தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான்.
முதல் டோஸ், இரண்டாவது டோஸ் அல்லது பூஸ்டர் டோசாக இருக்கலாம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.