ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பது 100 சதவீதம் உறுதி; டிரம்ப் திட்டவட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலக நாடுகளுக்கு கடுமையான வரி விதித்து வருவதுடன், எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அதோடு வெனிசுலாவின் பல கோடி மதிப்பிலான எண்ணெய் பீப்பாய்களை கொள்முதல் செய்துள்ளார். பின்னர், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்புகள் என அதிரடி காட்டிய டிரம்ப், கிரீன்லாந்து மீதும் குறி வைத்துள்ளார். இதுபற்றி டிரம்ப் செய்தியாளர்களிடம் ,

கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஏற்படும் வரை வரி
ஆர்க்டிக் பெருங்கடலில் பெரும்பலத்துடன் உள்ள ரஷியா மற்றும் சீனா நாடுகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க கிரீன்லாந்து எங்களுக்கு அவசியம் என கூறினார். கிரீன்லாந்தை கப்பற்றும் அமெரிக்காவின் திட்டத்திற்கு , டென்மார்க்கோ அல்லது நேட்டோ நாடுகளோ இதற்கு சம்மதிக்கவில்லை.
அதோடு கிரீன்லாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்த பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய படைகளை அனுப்பி வருகின்றன.
இந்நிலையில், டிரம்ப் , பிப்ரவரி 1-ந்தேதி முதல் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத வரி விதிப்பேன் என்றும், இந்த வரி விதிப்புகள் டென்மார்க், நார்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கும் பொருந்தும் என கூறினார்.
டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்த வரி விதிப்புகள் இருக்கும் என்றார். எனினும், கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க பாதுகாப்பு படைகளை அனுப்புவீர்களா? என்ற கேள்விக்கு, பதில் இல்லை என கூறினார்.
இதனால், தாக்குதல் நடத்தும் திட்டத்தில் டிரம்ப் இல்லை என கூறப்படுகிறது. அதேசமயம் இங்கிலாந்து மற்றும் நேட்டோவின் பிற 7 உறுப்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.