ஜெர்மனியில் அரச உதவிபெற்றும் அல்லாடும் மக்கள்!
ஜெர்மனியில் வறுமை கோட்டில் வாழும் மக்கள் பலர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் ஓய்வுதியம் பெற்று வாழ்ந்து வருபவர்கள் வறுமை கோட்டில் வாழ்ந்து வருவதாக புள்ளிவிபரம் ஒன்று வெளியாகி இருக்கின்றது.
ஜெர்மனியில் ஓய்வுதியம் பெறுபவர்களில் 20 சதவீதமானவர்கள் தங்களது வாழ்க்கையை சாதாரண நிலைமையை கொண்டு நடத்த முடியாத சூழ்நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, இவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாகவும் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.
சாதாரணமாக ஜெர்மனயில் தற்போது 20 மில்லியன் பேர் இவ்வாறு ஓய்வு ஊதியத்தை பெறுகின்றார்கள் என்றும் இவர்களில் இவ்வாறு 20 சதவீதமானவர்கள் இந்த நிலையில் உள்ளார்கள் என்றும் தெரியவந்திருக்கின்றது.
அதே வேளையில் 2015 ஆம் ஆண்டளவில் 13 சதவீதமானவர்கள் ஓய்வு ஊதியம் பெறுபவர்களே வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தார்கள் என்று இந்த புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
2021 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணிப்பீடுகளில் பெண்களில் கூடுதலாக 20 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் 832 யூரோ மாதாந்த ஓய்வு ஊதியமாக பெறுகின்றார்கள் என்றும் இந்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.