பிரித்தானியா மகாராணியை சோகத்தில் ஆழ்த்திய மற்றுமொரு சம்பவம்

Sulokshi
Report this article
பிரித்தானிய மகாராணியார் (British Empress0 அவர் ஆசையாக வளர்த்து வந்த இரண்டு நாய்க்குட்டிகளும் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இளவரசர் பிலிப் (Prince Philip) கடந்த பிப்ரவரி மாதம், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், லண்டனில் இருக்கும் St Bartholomew's மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, மகாராணியார் தனியாக கோட்டையில் இருந்ததால் அவருக்கு, ஆறுதலாகவும், ஒரு துணையாகவும் இருக்கும் என மகனும் இளவரசருமான Andrew இரண்டு அழகிய குட்டி நாய்களை பரிசாக வழங்கினார்.
அந்த நாய்களுக்கு Fergus மற்றும் dorgi என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் திகதி தன்னுடைய 99 வயது பிலிப் உயிரிழந்தார். கணவனை இழந்து கடும் சோகத்தில் இருந்த மகாராணியாருக்கு இந்த நாய்கள் பெரும் ஆறுதலாக இருந்தது. கணவர் மறைவுக்கு பின், அந்த இரண்டு நாய்களுடன் விண்ஸ்டர் கோட்டையை மகாராணியார் அடிக்கடி சுற்றி வந்ததை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் தற்போது அந்த இரண்டு நாய்களும் உயிரிழந்துவிட்டதாகவும், கடினமான காலக்கட்டத்தில் மகாராணியார் உடன் அந்த நாய்கள் இருந்ததால், இப்போது இதன் மரணம், மகாராணியாரை மேலும் வருத்ததிற்குள்ளாக்கியுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், ஒரு சில ஊடகங்களில் இந்த இரண்டு நாய்களில் ஒரு நாய் மட்டுமே இறந்துவிட்டதாக கூறப்படுவதால், அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே இதை உறுதி செய்ய முடியும்.
இதேவேளை மகாராணியார் பல ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.