சுவிஸில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்!
சுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 5,636 பேர் பாதிக்கப்பட்டதோடு 5 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் இதுவரை மொத்தமாக 10இலட்சத்து 73ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11 ஆயிரத்து 677 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுவிஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 1 இலட்சத்து 83 ஆயிரத்து 486 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 234 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுவிஸில் 1,909 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 8இலட்சத்து 78ஆயிரத்து 170 பேர் குணமடைந்துள்ளனர்.