கனடிய கல்லூரிகள் மீது இந்தியாவின் அதிர்ச்சி குற்றச்சாட்டு
சர்வதேச மாணவர்கள், கனடா ஊடாக அமெரிக்காவிற்கு கடத்தப்படுவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் இந்திய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர் வீசாவைப் பயன்படுத்தி இந்த சட்டவிரோத செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடியா பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையானது சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி அமெரிக்க கனடிய எல்லைப் பகுதியில் 39 வயதான ஜெகதீஷ் பட்டில் மற்றும் அவரது மனைவி இரண்டு குழந்தைகள் ஆகியோர் சடலங்கலாக மீட்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கை தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கனடாவிற்கு மாணவர் வீசா மூலம் கல்லூரிகளில் அனுமதி பெற்றுக் கொள்ளும் நபர்கள் கனடாவிற்குள் பிரவேசித்து அங்கிருந்து அமெரிக்காவிற்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் எல்லைகளைக் கடந்து அமெரிக்காவிற்கு நபர்கள் பிரவேசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் இவ்வாறான பல்வேறு சட்டவிரோத முகவர் நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் இது தொடர்பான விசாரணைகள் தொடந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து கனடா மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் இதுவரையில் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விசாரணைகள் தொடந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து கனடா மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் இதுவரையில் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.