லண்டனில் மோசமான வானிலையால் திருப்பி விடப்பட்ட இந்திய விமானங்கள்
மும்பையில் இருந்து லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலை காரணமாக, காட்விக் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அங்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும் பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோல, அமிர்தசரஸில் இருந்து பர்மிங்காம் நகருக்கு புறப்பட்டு சென்ற மற்றொரு ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலை காரணமாக லண்டனில் தரையிறக்கப்பட்டது.
இது தொடர்பாக லண்டன் விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் லண்டனில் நிலவும் மோசமான வானிலையால் அடுத்தடுத்த ஏர் இந்தியா விமானம் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டதால், பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.