இந்தியா- பாகிஸ்தான் மோதல் ; மத்தியஸ்தம் செய்ய தயார் என்கிறார் டிரம்ப்
இந்தியா- பாகிஸ்தான் இடையில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
அதோடு அமெரிக்கா இருநாடுகளிடமும் நல்ல நட்புறவையே கொண்டு இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இருநாடுகளும் மோதலை அதிகரிக்க கூடாது எனவும் மத்தியஸ்தம் செய்ய தயராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.