இந்தியா- பாகிஸ்தான் பதற்றம் ; சீனாவின் வெளியுறவுத்துறை வெளியிட்ட தகவல்
இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றத்தை தணிக்க தயார் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் தற்போதைய நிலவரம் கவலை அளிக்கிறது. நிலைமையை மேலும் சிக்கலாக்காமல் நிதானம், அமைதி, பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சர்வதேச சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.
சீனாவின் நிலைப்பாட்டை நேற்று இருநாடுகளின் தரப்பிலும் தெரிவித்து விட்டோம்.
அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறோம். உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட இருப்பதாக சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தியா- பாகிஸ்தான் மோதலில் நாங்கள் தலையிட மாட்டோம். இருநாடுகளுக்கிடையே இது பிராந்திய போராகவோ, அணுஆயுத போராகவோ மாற வேண்டாம் என எதிர்பார்க்கிறோம்.
அதிகபட்சமாக போர் பதற்றத்தை குறைக்க முயற்சி எடுக்க முடியும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.