இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் ; வெள்ளை மாளிகையிலிருந்து வெளியான தகவல்
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிந்தவரை விரைவில் பதற்றத்தைக் குறைக்க விரும்புகிறார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.
அவர் இரு நாடுகளின் தலைவர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிக்கிறார் என தெரிவித்தார்.