பாகிஸ்தானால் நட்டத்தை சந்திக்கும் நிலையில் இந்திய விமான சேவை
இந்திய விமானங்களுக்கு, தனது வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் அண்மையில் தடை விதித்ததால், இந்திய விமான சேவை நிறுவனத்துக்கு 600 மில்லியன் டொலர் நட்டம் ஏற்படவுள்ளது.
இதனை சுட்டிக்காட்டி இந்திய விமான சேவை நிறுவனம் இந்திய அரசாங்கத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இரண்டு நாடுகளும் பரஸ்பர கட்டுப்பாடுகளை அமுலாக்கி இருக்கின்றன.
இந்நிலையில் அண்மையில் இந்தியாவின் விமானங்கள் தனது வான்பரப்பை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் தடை விதித்ததன் விளைவாக, இந்திய விமானங்கள் மாற்றுப் பாதைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது.
இதனால் அதிக எரிபொருள் செலவு, பயணிகளின் வருகை வீழ்ச்சி போன்றவை காரணமாக 600 மில்லியன் மேலதிக செலவு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமை தொடரும் வரையில், தங்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய விமான சேவை நிறுவனம் அரசாங்கத்தைக் கோரியுள்ளது.