கனடாவில் சாலையோரம் குப்பை கொட்டிய தம்பதி? ஒரு வைரல் வீடியோ
கனடாவில் ஒரு தம்பதியர் குப்பை கொட்டும் வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அவர்கள் மீது இனரீதியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
கனடாவில், சாலையோரமாக ஓரிடத்தில் தங்கள் காரை நிறுத்திய தம்பதி, தங்கள் கைகளிலிருந்த பைகளிலிருந்து எதையோ எடுத்து வீசுவதைக் காட்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
வலுக்கும் விமர்சனங்கள்
இந்த வீடியோ சமூக ஊடகமான எக்ஸில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த தம்பதியர் இந்தியர்கள் என்றும், அவர்கள் குப்பை கொட்டுவதாகவும் கூறி அவர்களை விமர்சித்துவருகிறார்கள் பலர்.
அவர்கள் இந்தியாவை கெடுத்துவிட்டார்கள். அவர்களை கனடாவையும் கெடுக்க விடக்கூடாது என்கிறார் ஒருவர்.
இவர்களால் எல்லா புலம்பெயர்ந்தோருக்கும் கெட்ட பெயர் என்கிறார் மற்றொருவர்.
ஒருவேளை அவர்கள் ஏதாவது பறவைகள் அல்லது விலங்குகளுக்கு உணவளிக்கிறார்களோ என்றும் ஒருவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இப்படியே இனரீதியான விமர்சனங்கள் வரை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர், அவர்கள் கவரிலிருந்து எதையோ எடுத்து போட்டுவிட்டு, கவரை தங்கள் கைகளிலேயே வைத்துக்கொள்கிறார்கள்.
ஆகவே, அவர்கள் விலங்குகளுக்கு உணவளிப்பது போல தோன்றுகிறது. தயவு செய்து பொதுவாக யாரையும் குற்றப்படுத்தி பேசவேண்டாம், அவர்கள் கனடாவின் பொருளாதாரத்துக்கு எவ்வளவு பங்களிப்பைச் செய்கிறார்கள் என்பதையும் மறக்கவேண்டாம் என்கிறார்.