சிங்கப்பூரில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது இந்தியரால் பெண்ணுக்கு நேர்ந்த நிலை
சிங்கப்பூரில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது பெண்ணிடம் பாலியல் துஷ்பிரோயக செயலில் ஈடுபட்ட இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் செண்டொசா தீவில் தனியார் நட்சத்திர ஓட்டல் உள்ளது.
இந்த ஓட்டலில் 2023 புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி டிசம்பர் 31-ம் திகதி இரவு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது அந்த ஓட்டல் இருந்த இந்தியரான சுப்ரமணியன் முரளிமனோகர்ஜோஷி அங்கு வந்திருந்த பெண்ணிடம் தவறாக நடத்துக்கொண்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் முரளிமனோகரை 2 மணி நேரத்தில் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இந்தியர் முரளி மனோகர் ஜோஷியை வரும் 30-ம் திகதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில் முரளிக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.