அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை!
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபரொருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Georgia Province கிழக்கு கொலம்பஸ் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமித் குமார் படேல் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையத்தை நடத்தி வந்துள்ளார்.
மேலும் இந்த தூப்பாக்கி சூடு சம்பவத்தில் 45 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த Amit Kumar Patel என்வரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 45 வயதான இவர் நேற்று முன்தினம் (05) காலை வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதற்காக தனது கியாஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள வங்கிக்கு சென்றார்.
இந்நிலையில், இதனை அறிந்து அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர், அமித் குமார் படேல் வங்கிக்குள் நுழைவதற்கு முன் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இதன்பின்னர் குறித்த மர்ம நபர் அமித் குமார் படேல் வங்கியில் செலுத்த வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.