கனடாவின் அடுத்த பிரதமர் குறித்து இந்திய வம்சாவளியினர் கூறியிருந்த கருத்து
ஜஸ்டின் ட்ரூடோ சார்ந்த லிபரல் கட்சியின் தலைவராக மார்க் கார்னி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியினர் இருவர் கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட முன்வந்த நிலையில், அவர்களுக்கு கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ சார்ந்த ட்ரூடோவின் லிபரல் கட்சி அனுமதி மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.
அவர்களில் ஒருவர் ரூபி தல்லா (Ruby Dhalla, 50). ரூபி தல்லா, இந்தியாவின் பஞ்சாபிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர் ஆவார்.
ஒரு நாள் வெளிநாட்டின் தலையீடு என்றும், இன்னொரு நாள் பிரச்சார விதிகளை மீறியதாகவும், நாளுக்கொரு காரணம் கூறி தன்னை லிபரல் கட்சித் தலைமைக்கான போட்டியில் போட்டியிடவிடாமல் தடுத்துவிட்டதாக அப்போது தெரிவித்திருந்தார் ரூபி.
அத்துடன்,மார்க் கார்னி என்பவர் கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட தான் தடையாக இருப்பதாலேயே தன்னை போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார் ரூபி.
அப்போது ரூபி கூறியதுபோலவே, சரியாக மார்க் கார்னிதான் தற்போது லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆக, கனடாவில் விரைவில் தேர்தல் நடக்கலாம். தேர்தலில் லிபரல் கட்சி வெற்றிபெறும்பட்சத்தில், மார்க் கார்னி கனடாவின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.