வெளிநாடொன்றில் சாதனை படைத்த இந்திய வம்சாவளி மாணவி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவர், பிரிட்டனில் 15 வயதில் சட்டப் படிப்பில் சேர்ந்து, 21 வயதில் சட்டத்தரணியாக பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், மாயப்பூரில் உள்ள 'இஸ்கான்' எனப்படும் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் வளர்ந்தவர் கிருஷாங்கி மேஷ்ராம், 21. தற்போது மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் பெற்றோருடன் உள்ளார்.

பிரிட்டனின் திறந்தநிலை பல்கலையில் 15 வயதில் எல்.எல்.பி., எனப்படும் இளநிலை சட்டப்படிப்பில் சேர்ந்ததுடன் இவர் 18 வயதில் படிப்பை நிறைவு செய்தார்.
சட்டத்தரணியாக பதிவு பெறுவதற்கான தகுதித் தேர்வை எழுதி தற்போது தேர்ச்சி பெற்றார். இதையடுத்து 21 வயதில் சட்டத்தரணியாக பதிவு செய்தார்.
இதன் மூலம் பிரிட்டனில் சமீபத்திய ஆண்டுகளில் பதிவு செய்த மிகவும் இளம் வயது சட்டத்தரணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        