இந்திய வம்சாவளி பொலிசார் பலி: 18 வயது இளைஞர் கைது
கனடாவின் ஒன்ராறியோவில், இந்திய வம்சாவளி பொலிசார் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மதியம், ஒன்ராறியோவிலுள்ள Hearst என்னுமிடத்தின் அருகில், மன நலச் சட்டத்தின் கீழ், மனத்திறனை மதிப்பீடு செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 வயது இளைஞர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

தகவலறிந்த பொலிசார் அவரைப் பிடிக்க முயல, வாகனம் ஒன்றில் ஏறிய அந்த இளைஞர், இந்திய வம்சாவளி பொலிசாரான தருண் பாலி (29) என்பவர் மீது வாகனத்தைக் கொண்டு மோதியுள்ளார்.
வாகனம் மோதியதில் படுகாயமடைந்த தருண் பலியாகிவிட்டதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளனர். தருண் உயிரிழக்கக் காரணமாக இருந்த விபத்தை ஏற்படுத்திய அந்த 18 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. தருணைப் பொருத்தவரை, அவர் இந்திய வம்சாவளியினர் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.
அவர் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது போன்ற எந்த விவரங்களும் வெளியாகவில்லை.