அதிபர் பைடன் தொடர்பில் இந்திய பிரதமர் வெளியிட்ட பதிவு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி என இந்திய பிரதமர் மோடி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி ஜி-7 அமைப்பு செயல்படுகிறது.
ஜி-7 மாநாடு
ஆண்டுதோறும் நடைபெறுவது ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் விருந்தினர்களாக அழைக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டு இத்தாலியில் ஜி-7 மாநாடு நடைபெறுகின்றது, இந்தியா உள்பட 12 வளரும் நாடுகளின் தலைவர்களுக்கு இத்தாலி அழைப்பு விடுத்திருந்தது.
It's always a pleasure to meet @POTUS @JoeBiden. India and USA will keep working together to further global good. ???? pic.twitter.com/Xzyvp5cLCq
— Narendra Modi (@narendramodi) June 14, 2024
இத்தாலியில் அபுலியா பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் தொடங்கிய ஜி-7 மாநாடு இன்று நிறைவடைகிறது. மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் ஜி-7 மாநாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்துள்ளார். பைடனுடனான சந்திப்பு தொடர்பில் பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ,
"அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி. உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்" என்று தெரிவித்துள்ளார்.