கனடாவில் சாலை விபத்தில் இந்திய மாணவர் பலி
இந்திய இளைஞர் ஒருவர் கனடாவில் சாலை விபத்தொன்றில் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திங்கட்கிழமை, அதாவது, ஜனவரி மாதம் 5ஆம் திகதி, இரவு 10.30 மணியளவில், தன் நண்பர் ஒருவருடன் கனடாவின் மொன்றியலிலிருந்து ரொரன்றோ நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த அர்மான் (Arman Chauhan, 22) என்னும் இந்திய இளைஞரே சாலை விபத்தொன்றில் பலியாகியுள்ளார்.

விபத்து நடந்தபோது, அர்மான் நடந்து சென்றுகொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், அந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.
அர்மான் தன் பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். தங்கள் பிள்ளை கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற நிலையில், திடீரென அவரது மரணச் செய்தி கிடைத்ததால் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் அவரது பெற்றோர்.
அர்மானின் உடலை இந்தியா கொண்டு வர அவரது பெற்றோர் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், தங்கள் பிள்ளையின் மரணம் குறித்து முழுமையான விசாரணை கோரியுள்ளார்கள் அவர்கள்.