பிரித்தானியாவில் மனைவி குழந்தைகளைக் கொன்ற இந்தியர்; நீதிமன்றம் விடுத்த தீர்ப்பு!
பிரித்தானியாவில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் இந்தியர் ஒருவர் மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ரியை ஏற்படுத்தியிருந்த நிலையில் , சந்தேக நபருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஜூ சவுலவன் (வயது 52). இவரது மனைவி அஞ்சு அசோக். இவர் இங்கிலாந்தில் தாதியாக இதனால் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் அங்குள்ள கெட்டரிங் பகுதியில் வசித்து வந்தார்.
ஈவிரக்கமின்றி கொலை
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி அஞ்சு அசோக், தனது குழந்தைகளுடன் வீட்டில் உணர்வற்ற நிலையில் கிடந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது 3 பேரும் இறந்துவிட்டது தெரியவந்தது.
அவர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சஜூ சவுலவன் தான் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்திருப்பது உறுதியானது.
தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இங்கிலாந்தின் நார்த்தாம்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் சஜூ சவுலவனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.