பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் விவகாரம் ; பாதிக்கப்பட்டவர்களில் இந்திய பெண்ணின் பெயர்?
உலகளாவிய ரீதியில் எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு இந்திய பெண் (சிறுமி) இருந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் திட்டம் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. எனவே அந்த திட்டத்தின் கீழ் இந்திய பெண் ஒருவருக்கு நிதியுதவியும், மனநல ஆலோசனையும் அளிக்க அவரை அமெரிக்க அதிகாரிகள் தேடியுள்ளனர்.

பெண்ணிற்கு உதவி
2020 ஜனவரி 13-ஆம் திகதியிட்ட மின்னஞ்சல் ஒன்றில், இந்தியாவில் இருக்கும் இந்தப் பெண்ணைக் கண்டறியும் அமெரிக்க அதிகாரிகளின் முயற்சிகள் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் கிடைத்தால், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உதவியுடன் அவரைத் தொடர்பு கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இந்த மின்னஞ்சலில், அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முக்கியத் தகவல்கள் கறுப்பு மையால் மறைக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஆவணங்களை FBI வசம் ஒப்படைக்கவும் அந்த மின்னஞ்சலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு நிதி மூலம் அந்தப் பெண்ணிற்கு உதவி வழங்க அவரைத் தேடி வந்ததாகத் தெரியவந்துள்ளது.
2019 ஆகஸ்ட் மாதம் எப்ஸ்டீன் சிறையில் மரணமடைந்த சில மாதங்களுக்குப் பிறகு இந்தத் தகவல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.