கனடாவில் மாயமான இந்திய இளைஞர்: கிடைத்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி
இந்திய இளைஞர் ஒருவர் நயாகரா நீர்வீழ்ச்சியில் குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக கனடா பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
சரன்தீப் சிங் (22) என்னும் இளைஞர் கனடாவிலுள்ள பிராம்ப்டனில் தங்கி வேலை செய்துவந்த நிலையில், இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Abbuwal என்னும் கிராமத்திலுள்ள அவரது வீட்டுக்கு ஒரு நண்பர் வந்துள்ளார்.
அவர், சரன்தீப்பின் தந்தையான ஜோரா சிங்கிடம், கடைசியாக உங்கள் மகனிடம் எப்போது பேசினீர்கள் என்று கேட்க, அவர் மகனை மொபைலில் அழைத்துள்ளார்.
சரன்தீப்பின் மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கவே, அவர் சரன்தீப்புடன் தங்கியிருந்த நண்பர் ஒருவரை அழைத்து விசாரிக்க, அந்த நண்பர், சரன்தீப் கடந்த வியாழனன்று நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்றதாகவும், அதற்குப்பின் வேலைக்கு செல்வதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், சரன்தீப் தான் தங்கியிருந்த அறைக்குத் திரும்பவேயில்லை.
ஆகவே, சரன்தீப்பின் மாமா, நயாகரா நீர்வீழ்ச்சி பொலிசாரை தொடர்பு கொண்டு அவரைக் காணவில்லை என புகாரளித்துள்ளார்.
ஆனால், அவர்கள் அவருக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றைக் கூறியுள்ளார்கள். ஆம், சரன்தீப் நயாகரா நீர்வீழ்ச்சியில் குதித்து, தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாகவும், அவர் தன் மொபைலை கீழே வைத்துவிட்டு நீர்வீழ்ச்சியில் குதிக்கும் காட்சிகள் CCTVகமெராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
தகவலறிந்து சரன்தீப்பின் குடும்பத்தினர் கண்ணீர் வடித்துவரும் நிலையில், சரன்தீப்புடன் முன்பு வேலை செய்த நான்கு இளைஞர்கள் அவருக்கு தொந்தரவு கொடுத்துவந்ததாக அவர் தன்னிடம் கூறியதாக தெரிவித்த சரன்தீப்பின் தாயான பிந்தர் கௌர், தன் மகனுடைய மரணம் தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று கனடா பொலிசாரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |