கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய இளைஞர்
இந்திய மாணவர் ஒருவர் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் கனடா பொலிஸார் தெரிவித்ததாவது,
டொரன்டோ பகுதியில் இந்தியாவை சேர்ந்த 21 வயது இளைஞனான கார்த்திக் வாசுதேவ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த வியாழன் அன்று வேலைக்குச் செல்லும் ஜேம்ஸ்டவுனில் உள்ள டிடிசி ஸ்டேஷன் சுரங்கப்பாதையின் நுழைவாயில் அருகே அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய நபர்களால் சுடப்பட்டார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரொறன்ரோ காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசிங் தெரிவித்துள்ளார்.