விசா விதிகளை மீறினால், நாடு கடத்தலுக்கு ஆளாக நேரிடும்; இந்தியர்களுக்கு எச்சரிக்கை
இந்தியாவிலிருந்து வந்தவர்கள் விசா விதிகளை மீறினால், நாடு கடத்தலுக்கு ஆளாக நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த நிலையில், அதை இந்தியா ஏற்க மறுத்தது.
அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை
வரி விதிப்பு விகிதத்தில் இருநாடுகளுக்கு இடையேயான கருத்து முரண்பாடு அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டுத் தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு எச்சரித்துள்ளது.
அதாவது, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் விசாவின் விதிமுறைகளையும், அங்கு தங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட காலத்தையும் மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட நாட்களுக்குப் பின்பு, அமெரிக்காவில் தங்குவது, விசா ரத்து மற்றும் நாடு கடத்தப்படுவதற்கு வாய்ப்பாக அமையும் என அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் வழங்கப்படும் விசாக்களுக்கு, தகுதியற்ற தன்மை போன்ற கடுமையான விளைவுகளுக்கும் இவை வழி வகுக்குமென அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.