கனேடிய மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு!
கனடாவின் பணவீக்கம் தொடர்பில் கனேடிய மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அடுத்த வாரமளவில் கனடாவின் பணவீக்க வீதம் 8.3 வீதமாக உயர்வடையும் என மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
இந்த பணவீக்க வீதம் எதிர்வரும் சில மாதங்களுக்கு இவ்வாறு நீடிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் மாதம் எரிபொருட்களின் விலைகள் உயர்வாக காணப்பட்டதனால் இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துள்ளது
என தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் கனடாவின் பணவீக்கம் 7.7 வீதமாக காணப்பட்டதுடன் இது 1983ம் ஆண்டின் பின்னர் பதிவான கூடுதல் வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், எதிர்வரும் 2023ம் ஆண்டில் பணவீக்க வீதம் 3 ஆக குறைவடையும் எனவும், 2024ம் ஆண்டில் இந்த தொகை 2 வீதமாக மாறும் எனவும் மத்திய வங்கியின் ஆளுனர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.