கனடாவில் வரலாறு காணாத பணவீக்கம்
கனடாவில் வரலாறு காணாத பணவீக்க நிலைமை பதிவாகியுள்ளது என பிரதான கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவின் மளிகைக் கடைகளில் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அநேகமாக உயர்வடைந்துள்ளது.
கனடாவின் நுகர்வோர் விலைச்சுட்டி ஏப்ரல் மாதம் 6.8 வீதமாக பதிவாகியுள்ளது என புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1991ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக பணவீக்கம் கனடாவில் உச்சத்தை தொட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது உணவுப் பொருட்களின் விலைகள் ஒட்டுமொத்தமாக 8.8 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. மூன்று தசாப்த காலத்தில் இந்தளவு பணவீக்கம் பதிவானதில்லை என சுட்டிககாட்டப்பட்டுள்ளது.
1981ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக உணவுப் பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெஸ்டுரன்ட்களில் உணவுப் பொருட்களின் விலைகள் 6.6 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. பழங்கள், இறைச்சி, பாண் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளன.
ரஸ்ய – உக்ரைன் யுத்தம் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.