கனடாவில் பணவீக்க வீதம் குறித்து வெளியான அறிவிப்பு
கனடாவின் மொத்த பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 1.9% ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
பெட்ரோல் விலைகளின் உயர்வு பணவீக்கத்தில் முக்கிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோல் விலை மாதந்தோறும் 1.4% உயர்ந்தது. வருடாந்திர அடிப்படையில் விலை இன்னும் 12.7% குறைந்துள்ளது, ஆனால் ஜூலை மாதத்தில் இருந்த 16.1% குறைவிலிருந்து சற்று மந்தமானது.
இதன் காரணமாகவே மொத்த பணவீக்கத்தை உயர்த்தியுள்ளது. பெட்ரோல் விலை இல்லாமல் கணக்கிடப்பட்ட பணவீக்கம் 2.4% ஆக உள்ளது.
இது கடந்த மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்போது சற்று குறைவாகும். ஆகஸ்ட் மாதத்தில் மளிகைப் பொருட்களின் விலைகள் 3.5% உயர்ந்துள்ளன.
இறைச்சி வககைளின் விலைகள் 7.2% உயர்ந்துள்ளன வீட்டு வாடகை மற்றும் வீட்டு கடன் வட்டி செலவுகள் ஆண்டுக்கான பணவீக்கத்தை உயர்த்தும் முக்கிய காரணிகளாக தொடர்ந்தும் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.