ஒன்ராறியோவில் பாடசாலைகளை திறப்பது குறித்து வெளியான தகவல்!
ஒன்ராறியோவின் ஏனைய 4 பிரதேசங்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து, ஒன்ராறியோ கல்வி அமைச்சரும், தலைமை மருத்துவ அதிகாரியும் இன்று அறிவிக்கவுள்ளனர்.
இன்று காலை 11 மணியளவில், இவர்கள் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர். இரண்டு மில்லியன் மாணவர்களில் சுமார் 5 இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், Middlesex-London, Ottawa, Eastern Ontario, and Southwestern பிராந்திய சுகாதார பிரிவுகளில் வகுப்புகளை ஆரம்பிக்க இன்று பச்சைக்கொடி காண்பிக்கப்படவுள்ளது.
அதேவேளை,Toronto, Peel Region, Hamilton, York Region, மற்றும் Windsor பிரதேசங்களில் உள்ள பெற்றோரும் மாணவர்களும், பாடடசாலைகள் தொடர்பான முடிவை அறிவதற்கு வரும் 10ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும்.