கனடாவில் புலம்பெயர உள்ளவர்களுக்கு வெளியான தகவல்
கனடாவிற்கு வரும் புதிய குடியேற்றவாசிகளுக்கான முக்கியமான அம்சங்களில் ஒன்று, அவர்கள் எந்த நகரத்தில் குடியேறுவது சிறந்தது என்பதை தீர்மானிப்பது.
அதன்படி, அவை வேலை வாய்ப்புகள், அத்தியாவசிய சேவைகள், பல்வேறு கலாச்சார சலுகைகள் மற்றும் வலுவான சமூக உறவுகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கனடாவிற்கு புலம்பெயர உள்ளவர்கள் குடியேற சிறந்த பத்து நகரங்களின் பட்டியலொன்றை அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. குறித்த பட்டியலில் உள்ளடங்கும் நகரங்களும் மாகாணங்களும் பின்வருமாறு,
1. ரொறன்ரோ – ஒன்டாரியோ மாகாணம்
2. வான்கூவர் – பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia)
3. மாண்ட்ரீல் – கியூபெக் மாகாணம்
4. கல்கரி – ஆல்பர்ட்டா மாகாணம்
5. எட்மண்டன் – ஆல்பர்ட்டா மாகாணம்
6. ஒட்டாவா – ஒன்டாரியோ மாகாணம்
7. மிசிசாகா – ஒன்டாரியோ மாகாணம்
8. வின்னிபெக் – மனிடோபா மாகாணம்
9. ஹாலிஃபாக்ஸ் – நோவா ஸ்கோடியா மாகாணம்
10. சஸ்கடூன் – சஸ்காட்செவன் மாகாணம்
மேலும், கனேடிய குடியேற்ற அமைப்பு, குறிப்பிட்ட திறன்கள் மற்றும் சுயவிவரங்களின் அடிப்படையில் புலம்பெயர்பவர்களை தேர்ந்தெடுப்பதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் செயற்பட்டு வருகிறது.
முன்னேற்றம், கலாச்சார செழுமை மற்றும் உயர்தர வாழ்க்கைக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் 2024 ஆம் ஆண்டிலும் புலம்பெயர்பவர்களுக்கான சிறந்த நாடாக கனடா இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.