புடினின் பயம் குறித்து ஜெலன்ஸ்கி வெளியிட்ட தகவல்!
புடினுக்கு(Vladimir Putin) மரண பயத்தைத் தவிர வேறு பயமே கிடையாது என்று உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.
தன் சொந்த மக்களால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா இல்லையா என்பது தவிர வேறெந்த விடயமும் அவருக்கு பயத்தை ஏற்படுத்தாது என ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
ஆகவே, ரஷ்யர்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழையவிடாதபடி தடை விதித்து, அதனால் தேசிய அளவில் கோபத்தை ஏற்படுத்துவது மட்டுமே புடினை(Vladimir Putin) பாதிக்கும் என ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.
கடற்படையில் பல இழப்புக்கள்
இதற்கிடையில், ரஷ்யப் படைகள் தங்களுடைய கௌரவமாக கருதப்படும் மாஸ்க்வா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது முதல் தங்கள் கடற்படையில் பல இழப்புக்களை சந்தித்துள்ளதால் திணறிக்கொண்டிருக்கின்றன.
அத்துடன், பல போர் விமானங்களை இழந்துள்ளதும், பாம்புத் தீவை கைநழுவவிட்டதும் ரஷ்யப் படைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.