ரஷ்ய அதிபர் புதின் தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீரென ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக பரப்பான தகவலொன்று வெளியாகியுள்ளது.
புதின் கடுமையான குமட்டல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவரது அறைக்கு விரைந்த மருத்துவர்கள், சுமார் மூன்று மணி நேரம் அவர் அருகிலேயே இருந்து அவரைக் கவனித்துக்கொண்டதாகவும் ரஷ்ய அரசு ஆதரவு சேனல் தெரிவித்துள்ளது.
அதேசமயம் புதின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவரைப் போலவே தோற்றமளிக்கும் அவரது ‘அசல் புதினுக்கு பதிலாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது
. உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே புதின் மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், சமீபத்தில் பிரித்தானிய உளவுத்துறைத் தலைவர், புதினுக்கு மோசமான உடல் நல பாதிப்பு உள்ளது என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், மீண்டும் புதினுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.