கனடிய மத்திய வங்கியின் தீர்மானம் குறித்து அதிருப்தி
கனடிய மத்திய வங்கியின் தீர்மானம் தொடர்பில் அதிருப்தி வெளிடப்பட்டுள்ளது.
அண்மையில் கனடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை சிறிதளவு குறைத்திருந்தது.
எனினும், இந்த வட்டி வீத குறைப்பானது வீடுகளை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு பயனில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் வட்டி வீதம் 5 வீதத்திலிருந்து 4.75 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வட்டி வீத குறைப்பானது வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு சாதகமான நிலையை உருவாக்கவில்லை என அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
The Ipsos முன்னெடுத்த கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வட்டி வீதம் குறைக்கப்பட்டாலும் அடகுக் கடன் அடிப்படையில் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான செலவுகள் மிக அதிகமாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.