வட்டி வீதம் வாகனக் கொள்வனவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
வட்டி வீத மாற்றம் வாகன கொள்வனவில் தாக்கத்தை செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் கனடிய மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைத்திருந்தது. வங்கி வட்டி வீதங்கள் தற்பொழுது 4.25 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கி வட்டி வீத குறைப்பானது வாகன தவணை கட்டணங்களை பெரியளவில் பாதிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வங்கி வட்டி வீத குறைப்பானது வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு காத்திருப்போருக்கு பெரிய அளவு ஊக்குவிப்பாக அமையவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மேலும் வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டால், வாகனம் கொள்வனவு செய்பவருக்கு நன்மை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்கள் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்யும் போது வட்டி வீதங்கள் 8 முதல் 10வீதமாக காணப்படும்.
எதிர்வரும் நாட்களில் வட்டி வீதங்கள் குறைக்க வாகன கொள்வனவு அதிகரிக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.